நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி

நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி

தமிழ் சினிமாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாட்டு போட்டி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து கொரோனா நிவாரணத்துக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: –

‘’அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.

நானும் ஜெப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்‘’. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan