அஜித்தாக இருக்க விரும்புகிறேன் – பிரபல நடிகை

அஜித்தாக இருக்க விரும்புகிறேன் – பிரபல நடிகை

அஜித்தாக இருக்க விரும்புகிறேன் என்று பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஏ.எல். விஜய் இயக்கிய பொய் சொல்லப் போறோம் படம் மூலம் நடிகையானவர் பியா பாஜ்பாய். இப்படத்திற்கு பிறகு ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்த ஏகன் படத்திலும் நடித்தார்.

அஜித் பற்றி பியா பாஜ்பாய் கூறியதாவது,

நான் ஏகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது அஜித் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதும், நான் எவ்வளவு பெரிய படத்தில் நடிக்கிறேன் என்பதும் எனக்கு தெரியாது.

ஏற்காட்டில் படப்பிடிப்பு நடந்தபோது என் ஷாட் வந்ததும் என்னை அழைத்தார்கள். நான் என் வேனில் இருந்து வெளியே வருவதற்குள் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஒருவருக்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

அஜித் சார் வருவதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகே அஜித் சார் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை தெரிந்து கொண்டேன். இது இவ்வளவு பெரிய படம் என்று யாருமே என்னிடம் கூறாததை நினைத்து கோபப்பட்டேன். அஜித் சார் என்னிடம் அன்பாக பழகினார்.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக இருக்க முடியும் என்பதை அவரை பார்த்து கற்றுக் கொண்டேன். ஒரு நாள் நான் வேறு ஒருவராக இருக்க முடியும் என்றால், நான் அஜித் சாராக இருக்க விரும்புகிறேன். ரசிகர்கள், மக்களின் அன்பை உணரவே அஜித் சாராக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan