கொரோனா வைரஸில் இருந்து மீண்ட லாரன்ஸ் உடைட் குழந்தைகள்

கொரோனா வைரஸில் இருந்து மீண்ட லாரன்ஸ் உடைட் குழந்தைகள்

ராகவா லாரன்ஸ் டிரஸ்டில் இருந்த குழந்தைகள் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நடத்தும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அவரே கூறினார். இந்நிலையில் குழந்தைகள் அனைவரும் கொரோனா வைரசில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர விரும்புகிறேன். எனது குழந்தைகள் ட்ரீட்மெண்ட் முடிந்து பத்திரமாக டிரஸ்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 

 அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி. எனது சமூக சேவைதான், எனது குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்த அனைவருக்கும் நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan