படப்பிடிப்புக்காக கொரோனா இல்லாத நகரத்தை உருவாக்கும் டாம் குரூஸ்

படப்பிடிப்புக்காக கொரோனா இல்லாத நகரத்தை உருவாக்கும் டாம் குரூஸ்

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் டாம் குரூஸ், படப்பிடிப்புக்காக கொரோனா இல்லாத நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தில்  நடிக்கிறார். இதன் தயாரிப்பாளரும் அவர்தான். வெனிஸ் நகரில் நடந்து கொண்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் டாம் குரூஸ் இங்கிலாந்து அரசின் அனுமதியுடன் புதிய முயற்சியில் இறங்கி உள்ளார். அதன்படி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு ஷயர் மாகாணத்தில் தற்காலிக திரைப்பட நகரம் அமைக்க டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளார். 

இங்கு டாம் குரூஸ் உள்பட  மிஷன் இம்பாசிபிள் படகுழுவினர் அனைவரும் தங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. படப்பிடிப்புக்கு தேவையான அரங்குகளும் போடப்படுகிறது. கொரோனா இல்லாத நகரமாக இது அறிவிக்கப்பட்டு, பலத்த மருத்துவ பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்படுகிறது. படக்குழுவினர் அனைவரும் அங்கேயே தங்கி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை அடுத்தாண்டு நவம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan