இதுவும் வதந்தியா… திருமணம் குறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை

இதுவும் வதந்தியா… திருமணம் குறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை

சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் பரவிவந்த நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சிம்புவுக்கும், லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின.  

இந்நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா ராஜேந்தர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan