ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? – ஜெயராம் விளக்கம்

ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? – ஜெயராம் விளக்கம்

மலையாள நடிகரான ஜெயராம், ரஜினியுடன் தமிழ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

இப்படத்தில் சரத்பாபு நடித்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் ஜெயராம். பின்னர் அவர் இப்படத்திலிருந்து விலகினார். அதற்கான காரணத்தை அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஏனெனில், முத்து படத்தில் ரஜினியை அடிப்பது போல் காட்சி இருந்தது. அவ்வாறு அடித்தால் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள் என்பதால் அதில் நடிக்க மறுத்ததாக நடிகர் ஜெயராம் விளக்கம் அளித்துள்ளார். 

ஜெயராம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan