விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும்  ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது. 

ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசத்திவரும் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். ஆம்.. முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். 

விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் – துருவ் விக்ரம் என்ற இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத்.

 
‘சீயான் 60’ படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில் ‘மாஸ்டர்’ தயாராகி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சீயான் 60’ படத்தை தயாரிக்கவுள்ளார். 

 ‘சீயான் 60’ 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan