சிரஞ்சீவி சார்ஜா மரணம் – கதறி அழுத அர்ஜுன்

சிரஞ்சீவி சார்ஜா மரணம் – கதறி அழுத அர்ஜுன்

மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அர்ஜுன் கதறி அழுதிருக்கிறார்.

பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார். இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

 நடிகை மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் சிரஞ்ஜீவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

 இவரது இறுதி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை மேக்னா அழுத காட்சிகள் பார்ப்பவர்களை  மனதை உருக்கும் அளவிற்கு இருந்தது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan