கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல…. அசுர அடி – ரஜினிகாந்த்

கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல…. அசுர அடி – ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல, வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசங்களை அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan