பெண் இயக்குனரின் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அசோக் செல்வன்

பெண் இயக்குனரின் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அசோக் செல்வன்

“ஓ மை கடவுளே” எனும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பின் நடிகர் அசோக் செல்வன் பெண் இயக்குனரின் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக  நிஹாரிகா நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான  “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். 

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்க உள்ளார். இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதை என கூறப்படுகிறது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க உள்ளார். ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்நிலையில், தற்போது பூஜையுடன் இப்படத்தின் பாடல் வேலைகள் துவங்கி உள்ளது. இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்கி உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகான ஐந்தாவது மாதத்தில், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார் தெரிவித்துள்ளார். படத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan