தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம்…. சொன்னதை செய்த லாரன்ஸ்

தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம்…. சொன்னதை செய்த லாரன்ஸ்

கொரோனா நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ், தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு  ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி வழங்கினார். இதுதவிர தூய்மை பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில், லாரன்ஸின் அறிவுறுத்தலின் பேரில் தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் 25 லட்சத்து 38  ஆயிரத்து 750 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தெரிவித்துள்ளார். இதன்முலம் 3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டர் வாயிலாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan