படப்பிடிப்பு இல்லாததால் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்… உதவி கேட்கும் தோழி

படப்பிடிப்பு இல்லாததால் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்… உதவி கேட்கும் தோழி

சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகை ஒருவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதால் அவரது தோழி பண உதவி கேட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் இயங்காததால் அது சார்ந்த பணி செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழந்து, அவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சில துணை நடிகர்கள் செலவுக்கு பணமில்லாமல் மக்களிடம் உதவி கேட்கும் துயரமும் அரங்கேறி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக பிரபல இந்தி டிவி நடிகை நுபுர் அலங்கரின் பணம் தனியார் வங்கியில் எடுக்கமுடியாமல் மாட்டிக்கொண்டுள்ளது. அவரது அம்மாவின் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறதாம். 

இதற்காக அவரது நெருங்கிய தோழி ரேணுகா ஷஹானே தனது பேஸ்புக் பக்கத்தில் நுப்புருக்காக மக்களிடம் பணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan