அந்த பாடல் முதலில் பிடிக்கவில்லை… பிறகு வேற லெவல்… ஏ.ஆர்.ரகுமான் இசை குறித்து கமல்

அந்த பாடல் முதலில் பிடிக்கவில்லை… பிறகு வேற லெவல்… ஏ.ஆர்.ரகுமான் இசை குறித்து கமல்

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான அந்த பாடல் முதலில் பிடிக்கவில்லை என்றும் பிறகு வேற லெவலில் இருந்தது என்றும் கமல் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் இன்று நேரலையில் பேசிக்கொண்டனர். அப்போது ஏ ஆர் ரகுமான் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்கப்பட்டது.. 

அதற்கு கமல், இசையமைப்பாளர் ரகுமான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக் கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற இசை மீண்டும் ரிப்பீட் ஆகாது. இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பலேறி போயாச்சு என்ற பாடல் முதலில் கேட்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. இயக்குனரிடமும் சொன்னேன். ஆனால் படத்தின் சூட்டிங் போது அந்தப் பாடல் வேற லெவலில் இருந்தது. 

எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஏ.ஆர். ரகுமான் ஒருவர். இந்தியன் படத்தின் பாடல்களை மிஞ்சும் அளவிற்கு தலைவன் இருக்கிறான் பாடல் உருவாகும். அப்படி இல்லை என்றால் இருவரும் இணைந்து ஆல்பம் வெளியிடுவோம் என்று கூறினார் கமல்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan