சுஷாந்த்சிங் தற்கொலை – தொழில்முறை போட்டி கோணத்தில் விசாரணை

சுஷாந்த்சிங் தற்கொலை – தொழில்முறை போட்டி கோணத்தில் விசாரணை

சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொழில்முறை போட்டி கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று முன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரதமர் மோடி உள்பட தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். 

பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

 இந்நிலையில் மகாராஷ்டிரா அரசாங்கம், தனது விசாரணையில் மருத்துவ மனச்சோர்வுடன் தொழில்முறை போட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஆராயும் என்று கூறியுள்ளது.

 மேலும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டரில் தொழில்முறை போட்டி காரணமாக அவர் மனச்சோர்வடைந்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், தொழில்முறை போட்டி காரணமாக அவர் மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.  இந்த கோணத்திலும் மும்பை காவல்துறை விசாரிக்கும் ”என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan