ரசிகரின் திறமையை புகழ்ந்த கமல்

ரசிகரின் திறமையை புகழ்ந்த கமல்

தன்னுடைய படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடிய ரசிகரின் திறமையை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிப் படங்களுள் ஒன்று அபூர்வ சகோதரர்கள். இதில் கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்படத்தில் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

 இந்த நிலையில், அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலுக்கு நடிகர் அஸ்வின் குமார் டிரெட் மில்லில் நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த வீடியோ கமல்ஹாசனின் கண்களில் பட, அந்த வீடியோவை பார்த்து ரசித்த கமல்ஹாசன், அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 அந்த வீடியோவில் ஆடிய அஸ்வின்  குமாரை பாராட்டிய கமல் கூறியிருப்பதாவது,
நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! இவ்வாறு கூறியிருக்கிறார்.

நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! https://t.co/xDfE7PW7Z0

— Kamal Haasan (@ikamalhaasan)

June 19, 2020

 அஸ்வின் குமார் தமிழில் துருவங்கள் பதினாறு, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் போட்ட வாழ்த்துக்கு, அஸ்வின் குமார் இது போதும் எனக்கு என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan