கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்

கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்

கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் விமர்சிக்கிறார்கள் என்று நடிகை ரியாசென் கோபமாக கூறியிருக்கிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்த தாஜ்மகால் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் ஆவார். 

ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாகவும் முத்தகாட்சிகளில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதில் அளித்து ரியா சென் கூறியதாவது:- 

“நான் குட்டை பாவாடை அணிவதை சர்ச்சையாக்குகின்றனர். முத்தகாட்சியிலும் கவர்ச்சியாகவும் நடித்தால் துணிச்சலாக செய்துள்ளார் என்கின்றனர். முன்னணி நடிகைகள் இதுபோல் உடை அணிந்தாலோ முத்த காட்சிகளில் நடித்தாலோ யாரும் கண்டு கொள்வது இல்லை. என்னை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர். சினிமாவில் எனக்கு நண்பர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் உன்னை மட்டும் ஏன் தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்கின்றனர்.எனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் இந்த தாக்குதல் நடக்கிறது.“
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan