கொரோனா பீதி…. அனுமதி கிடைத்தும் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் தெலுங்கு நடிகர்கள்

கொரோனா பீதி…. அனுமதி கிடைத்தும் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் தெலுங்கு நடிகர்கள்

ஆந்திரா, தெலுங்கானாவில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தாலும், கொரோனா பீதியால் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார்களாம்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பீதி நிலவுகிறது. சில மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்து இரு வாரங்கள் ஆகியும் இரு மாநிலங்களிலும் தெலுங்கு படப்பிடிப்புகளை இன்னும் தொடங்கவில்லை. 

மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அல்லு அர்ஜூன் மற்றும் அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் கொரோனா அச்சத்தால் ஆகஸ்டு மாதம் வரை வர படப்பிடிப்புக்கு வர மாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனால் படப்பிடிப்பை தொடங்க இயலாத நிலைமை உள்ளது. 

நடிகர் ராணாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, “கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் எல்லோரும் ஆகஸ்டு மாதம்வரை படப்பிடிப்புக்கு வரமாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனால் படப்பிடிப்பை தொடங்க இயலாத நிலைமை உள்ளது. 

குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் வைத்து பெரிய படப்பிடிப்புகளை நடத்துவதும் இயலாத காரியம். பல தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னையில் இருக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதிலும் சிக்கல் உள்ளது. எனவே ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம்தான் படப்பிடிப்பை தொடங்க முடியும்“ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan