சோனாக்‌ஷி சின்காவின் திடீர் முடிவு… அதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்

சோனாக்‌ஷி சின்காவின் திடீர் முடிவு… அதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்கா எதிர்மறையான விஷயங்களால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

பாலிவுட் படங்களில் நடித்து வரும் சோனாக்‌ஷி சின்கா கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்‌ஷி.

 இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், எதிர்மறையான விஷயங்களிலிருந்து விலகி இருப்பது தான் மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல்படி. இப்போதெல்லாம் ட்விட்டரில் தான் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நான் எனது ட்விட்டர் கணக்கை டிஆக்டிவேட் செய்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கான எதிர்வினைகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி பற்றி எரியட்டும். எனக்கு கவலையில்லை என்று சோனாக்‌ஷி தலைப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan