காதலியை கரம்பிடித்தார்  நடிகர் ‘கும்கி’ அஸ்வின்

காதலியை கரம்பிடித்தார் நடிகர் ‘கும்கி’ அஸ்வின்

நடிகர் கும்கி அஸ்வின் திருமணம் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் சென்னையில் எளிமையாக நடந்தது.

பிரபல நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின். இவர் விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார். பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. 

கும்கி அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கினால் அரசு விதிமுறைப்படி சமூக விலகலுடன் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து இந்த திருமணத்தை நடத்தினர். ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கும்கி அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan