இலவசமாக ஓடிடி-யில் வெளியாகும் சுஷாந்தின் கடைசி படம்…. வெளியீடு தேதி அறிவிப்பு

இலவசமாக ஓடிடி-யில் வெளியாகும் சுஷாந்தின் கடைசி படம்…. வெளியீடு தேதி அறிவிப்பு

சுஷாந்த் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்ற சர்ச்சைகளும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுஷாந்த் கடைசியாக நடித்த படம் ‘தில் பெச்சாரா’. இப்படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் சுஷாந்தின் ரசிகர்கள் அவரது கடைசி படத்தில் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஏ.ஆர்.ரகுமான், சிம்பு உள்ளிட்ட பிரபலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இருப்பினும் ஓடிடி வெளியீடு உறுதியானதால், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளனர். ஜூலை 24-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை அனைத்து ரசிகர்களும் எந்தவித கட்டணமின்றி இலவசமாக காணலாம் என ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan