கொரோனாவுக்கு பலியான தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர்

கொரோனாவுக்கு பலியான தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர்

பிரபல தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் தனஞ்செயன் அவர்களின் சகோதரர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கோலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் தனஞ்செயன். இவரின் மூத்த சகோதரர் கொரோனாவால் பலியான செய்தி கோலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனஞ்செயன் அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தனது சகோதரர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாகவும், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் சிகிச்சையில் இருப்பதாகவும் தனஞ்செயன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

 மேலும் தனது சகோதரரின் குடும்பத்திற்கு உயரிய சிகிச்சை அளிக்க முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உதவி செய்ததாகவும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா எனும் கொடிய நோய் தொற்றாமல் இருக்க அனைவரும் கவனமாக இருக்கவும் என்றும், முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்கவும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan