சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேறி விட்டேனா?… ரகுல் பிரீத் சிங் காட்டம்

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேறி விட்டேனா?… ரகுல் பிரீத் சிங் காட்டம்

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வந்த செய்திக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், இஷா கோபிகர், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். 

அயலான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரகுல் பிரீத் சிங் மறுப்பதாகவும், கொரோனாவைக் காரணம் காட்டி அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அதனால் படத்திலிருந்து அவரை வெளியேற்ற படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதற்கு இயக்குநர் மற்றும் ரகுல் பிரீத் சிங் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ரகுல் பிரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில், இப்போது யார் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். நான் படப்பிடிப்புக்கு செல்ல மிகவும் ஆவலாக உள்ளேன் என்றும், வதந்தி பரப்புவோருக்கு காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.

அயலான் இயக்குநர் ரவிக்குமார் தனது சமூகவலைதள பதிவில், ஷூட்டிங்கில் மிகவும் சரியாக நடந்து கொள்வோரில் ரகுல் பிரீத் சிங்கும் ஒருவர். வதந்திகளை வெளியிட வேண்டாம். மீண்டும் ரகுல் பிரீத் சிங் உடன் இணைந்து படப்பிடிப்பை தொடங்க அனைவரும் ஆவலாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan