பிரியா வாரியரின் 40 வயது காதலர்

பிரியா வாரியரின் 40 வயது காதலர்

மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை பிரியா வாரியரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. இதனால் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அந்த படம் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தற்போது இரண்டு இந்தி படங்களையும், ஒரு கன்னட படத்தையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார். 

இந்தநிலையில் மலையாள  படம் ஒன்றில் நடிக்க பிரியா ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்க உள்ள இப்படத்திற்கு ‘நால்பதுகாரண்டே இருபத்தியொன்காரி’ என பெயரிட்டுள்ளனர். கதாசிரியரும், குணச்சித்திர நடிகருமான அனூப் மேனன்  இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். தலைப்பே படத்தின் கதையை சொல்லும் விதமாக அமைந்து இருக்கிறது. அதாவது ஒரு 40 வயது ஆணுக்கும், 21 வயது பெண்ணுக்குமான காதல் தான் படத்தின் கதையாம்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan