திரையுலகம் முடங்கியதால் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்

திரையுலகம் முடங்கியதால் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகம் முடங்கி இருப்பதால் பிரபல நடிகர் ஒருவர் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்று வருகிறார்.

கொரோனா ஊரடங்கு வைரஸ் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையைும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் நடிகர்கள் சிலரும் வருமானம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் தெருவில் பாடிப்பாடி காய்கறி விற்று வருகிறார். ஜாவேத் ஆமிர் கானின் ‘குலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தனது செலவுகளுக்கு காசில்லாமல் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan