பொங்கலுக்கு வருவாரா அண்ணாத்த?

பொங்கலுக்கு வருவாரா அண்ணாத்த?

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால், ரஜினியின் அண்ணாத்த படம் பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்பதில் தெளிவு இல்லை. வைரஸ் தொற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மத்திய-மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போகின்றன. 

மராட்டிய அரசு வயதான நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களை தவிர்த்து விட்டு படப்பிடிப்புகளை நடத்த தளர்வு அளித்தது. இயக்குனர்கள் பலரும் வயதானவர்கள் என்பதால் இந்த நிபந்தனையை திரையுலகினர் ஏற்கவில்லை. இதுபோல் ஆந்திரா, தெலுங்கானாவில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்தும் கொரோனா அச்சுறுத்தலால் நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து விட்டனர்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்புகள் கொரோனாவால் முடங்கி உள்ளன. ஐதராபாத்தில் அண்ணாத்த படத்தின் பாதி படப்பிடிப்பை முடித்து விட்டனர். மீதி படத்தையும் முடித்து அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். கொரோனாவால் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து பொங்கலுக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்தது. 

அப்போதும் படம் வெளியாக வாய்ப்பில்லை மேலும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா முழுமையாக ஒழிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முடிவில் ரஜினி இருக்கிறார். அஜித்தின் வலிமை படப்பிடிப்பும் 50 சதவீதம் முடிந்துள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு மேலும் தள்ளிப்போகிறது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan