பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணையும் தனுஷ்?

பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணையும் தனுஷ்?

தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம்வரும் தனுஷ், பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான். 

இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஊரடங்குக்கு பின் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கு முன் தனுஷ் படத்தை எடுத்து முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இது வடசென்னை படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது அந்த படத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பியதும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan