உடல் எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா

உடல் எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹன்சிகா, உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 

இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஹன்சிகா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய போட்டோஷுட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், கொழுகொழுவென இருந்த ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியானது தான். ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் இருக்கும் ஹன்சிகாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan