விருது கொடுப்பதில் எனக்கு அநியாயம் நடந்துள்ளது – தமன்னா

விருது கொடுப்பதில் எனக்கு அநியாயம் நடந்துள்ளது – தமன்னா

விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா கூறியிருக்கிறார்.

சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் வெளியில் இருந்து வரும் நடிகர், நடிகைகள் வாய்ப்புகளை அவர்கள் தடுப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. விருதுகளைகூட வாரிசு நடிகர், நடிகைகளுக்குத்தான் கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 

நடிகை தமன்னாவும் இதனை ஆமோதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது. அதை நிச்சயம் சொல்லித்தான் ஆக வேண்டும். நிறைய தடவை விருதுகளுக்கு எனது பெயர் பரிந்துரைக்கபட்டது. ஆனால் விருதுமட்டும் எனக்கு வரவே இல்லை. 

விருதுகள் தராமல் திறமையான நடிகர் நடிகைகளை ஒதுக்க முடியாது. ரசிகர்கள் ஆதரவுதான் முக்கியம். அவர்கள் எவ்வளவு நாள் ஆதரிக்கிறார்களோ அவ்வளவு நாள் நிலைத்து இருக்கலாம். எனது படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பதில் திருப்தியாக இருக்கிறேன். ரசிகர்கள் ஆதரவை விட பெரிய விருது எதுவும் கிடையாது.” 

இவ்வாறு தமன்னா கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan