அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது – ஐஸ்வர்யா ராய் உருக்கம்

அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது – ஐஸ்வர்யா ராய் உருக்கம்

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய், அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11-ம் தேதி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
10 நாட்கள் சிகிச்சை பெற்ற ஐஸ்வர்யாராய், ஆராத்யா இருவரும் கடந்த ஜூலை 27-ம் தேதி நலமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார். அதில், “எனது குடும்பத்தினர் நலம் பெற நீங்கள் காட்டிய அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். உங்களின் இந்த அன்பைக் கண்டு எனது இதயம் கரைந்துவிட்டது. மிக்க நன்றி” என்று கூறி கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan