நீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி

நீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லாபம் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘லாபம்’. கமர்ஷியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில், லாபம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி லாபம் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan