வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனன்… தனுஷ் தரப்பில் கிடைத்த புதிய தகவல்

வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனன்… தனுஷ் தரப்பில் கிடைத்த புதிய தகவல்

நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட மாளவிகாவிற்கு அவர் தரப்பில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ஜூலை 28-ம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன், “பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். வரும் வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் நடிக்க உற்சாகமாக இருக்கிறேன். யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

மாளவிகா மோகனனின் ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் தனுஷ், “நன்றி… விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

 இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘D43’படத்தில் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan