விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளதாகவும், படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்க போவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

 மேலும் இந்த படத்தில் இசையமைக்க இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan