நண்பர்களுடன் காணொளி கால் பேசி மகிழ்ந்த விஜய்…. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

நண்பர்களுடன் காணொளி கால் பேசி மகிழ்ந்த விஜய்…. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்துள்ளார்.

நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று வருவதும் வாழ்த்துக்கள் கூறுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

 ஆனால் தற்போது நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரடங்கு காரணமாக அது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

 ஆனால், பலர் வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் குழந்தை பருவத்தில் இருந்து ஒரே நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சஞ்சீவ், ஸ்ரீநாத்  உள்ளிட்ட அனைவருடனும் இன்று வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடினார். 

 தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan