ரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்

ரசிகர்கள் வெளியிட்ட காணொளி…. கண் கலங்கிய சோனு சூட்

பிரபல பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சோனு சூட், ரசிகர்கள் வெளியிட்ட வீடியோவைக் கண்டு கண் கலங்கி இருக்கிறார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த நடிகர் சோனுசூட், அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்து நாடு முழுவதும் கவனம் பெற்றார்.

வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். 

இந்த நிலையில் சோனு சூட் சமீபத்தில் கபில் சர்மா தொகுத்து வழங்கும் பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். விரைவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் சோனு சூட் அவர்களால் உதவி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உருக்கமாக அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். இதை பார்க்கும் சோனு சூட் மேடையிலேயே கண் கலங்கி நிற்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan