உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது கருப்பு கண்ணாடி என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் படம் “கருப்பு கண்ணாடி”. இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சரண் ராஜ், நடிகர் கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. இறுதி கட்டத்தில் இப்படம் இருக்கும் நிலையில், இயக்குனர் நியூட்டன் ஜி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Source: Malai Malar