Press "Enter" to skip to content

முடங்கிய படத்தை தூசி தட்டும் சந்தானம்

காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சந்தானம், முடங்கிய தன்னுடைய படத்தை தூசி தட்டி ஆரம்பிக்க இருக்கிறார்.

முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது பிஸ்கோத், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. 

இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘மன்னவன் வந்தானடி’ திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 80 சதவீகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில காரணங்களால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் வருண்மணியன் இந்த படத்தை கைப்பற்றியுள்ளதாகவும், மீதி உள்ள 20 சதவிகித படப்பிடிப்பை தொடங்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை மீண்டும் தொடங்கினால் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என சந்தானமும் கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் இந்த படத்தின் 20 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். எனவே செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »