Press "Enter" to skip to content

திரைப்படம் விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்

சினிமா விருந்துகள் போதை மாத்திரைகள் இல்லாமல் நடப்பது இல்லை என்று விஷால் பட நடிகை புகார் கூறி இருக்கிறார்.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் கொக்கைன் போதை பொருட்கள் புழக்கம் இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. பெரிய நடிகர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் சிறைக்கு செல்வார்கள் என்று கங்கனா ரணாவத்தும் சாடினார். ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்கிகவுசல் உள்ளிட்ட பலரது பெயர்கள் போதை பொருள் சர்ச்சையில் அடிபடுகின்றன. 

கன்னட பட உலகிலும் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டி.வி. நடிகை அனிகா கைதாகி உள்ளார். இவர் போதைபொருட்களை வாங்கி நடிகர், நடிகைகளுக்கு விற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தெலுங்கு பட உலகிலும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழில் விஷாலுடன் ஆம்பள படத்தில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை மாதவி லதா இதுகுறித்து கூறும்போது, “தெலுங்கு சினிமாவில் போதை பழக்கம் உள்ளது. சினிமா விருந்துகள் போதை மாத்திரைகள் இல்லாமல் நடப்பது இல்லை. முன்னணி நடிகர்கள் அரசியல் செல்வாக்கினால் போதை பொருள் வழக்கில் இருந்து தப்பி உள்ளனர். போதை பொருள் வழக்கை விசாரித்த அதிகாரியையும் வேறு துறைக்கு மாற்றி விட்டனர்” என்றார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »