Press "Enter" to skip to content

சவால் விட்ட கங்கனா ரணாவத்.. பாதுகாப்பு அளித்த உள்துறை அமைச்சகம்

மும்பைக்கு வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்துள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மராட்டிய அரசியல்வாதிகளும் மும்பை போலீசாரும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சாடினார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. 

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மராட்டியத்தையும், மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வரவேண்டாம் என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் கங்கனா ரணாவத் “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விடுத்தார். 

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு (Y +) பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »