Press "Enter" to skip to content

இமைபோல் காப்பேன் – காதல் மனைவி குறித்து ஆரவ் உருக்கம்

நடிகர் ஆரவ்வுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில், அவர் தனது காதல் மனைவி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். 

ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன்அவர்களது திருமணம் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தனது காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆரவ், ‘இமைபோல் காப்பேன்’ என பதிவிட்டுள்ளார். நடிகை ராஹி, கவுதம் மேனன் இயக்கும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »