Press "Enter" to skip to content

பட வாய்ப்பு வந்தால் பிரபலங்கள் டி.சர்ட்டை கழட்டி விடுவார்கள்… ஜாக்கிரதை – பிரபல நடிகை

பட வாய்ப்பு வந்தால் பிரபலங்கள் டி.சர்ட்டை கழட்டி விடுவார்கள்.. ஜாக்கிரதை என்று பிரபல நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தி எப்படி இந்த நாட்டின் தாய் மொழியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கையும், நான் தமிழ் பேசும் இந்தியன் என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். 

இந்த ஹேஷ்டேக்கில், பலரும் தங்கள் கருத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்தவண்ணம் உள்ளனர். திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் கருணாகரன் ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர். 

தற்போது காமெடி நடிகையும், பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டவருமான ஆர்த்தி, ‘நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்… ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு, விரும்பினால் படிப்போம்… இந்தி பட வாய்ப்பு வந்தால் t.Shirt-யை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »