போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை

போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை, மருத்துவ பரிசோதனைக்காக கொடுத்த சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்றுள்ளார்.

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த 4-ந் தேதி நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ராகினி, மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருந்து பரிசோதனைக்கு கொடுத்து ஏமாற்ற முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

யாரேனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை சிறுநீர் மாதிரியை எடுத்து மருந்து பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிய முடியும். சிறுநீரில் தண்ணீரைச் சேர்ப்பது சிறுநீரின் வெப்பநிலையை குறைக்கும், இது உடல் வெப்ப நிலைக்கு சமமாக இருக்கும். 

பின்னர் மீண்டும் ராகினியிடம் சிறுநீர் மாதிரியை பெற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ராகினியின் நடத்தை வெட்கக்கேடானது என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார், போலீஸ் காவலில் நீட்டிப்பு கோரும் போது  இந்த சம்பவம் மாஜிஸ்திரேட்டிடம் குறிப்பிட்டு காட்டப்படும் என்று அவர் கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan