அட்லி குடும்பத்தில் நடந்த சோகம்… இதயம் உடைந்து போயிருக்கிறது என்று உருக்கம்

அட்லி குடும்பத்தில் நடந்த சோகம்… இதயம் உடைந்து போயிருக்கிறது என்று உருக்கம்

இயக்குனர் அட்லி குடும்பத்தில் நடந்த சோகத்தால் இதயம் உடைந்து போயிருக்கிறது என்று அவர் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.

பிரபல இயக்குனர் அட்லியும் நடிகை பிரியாவும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் பிரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி கூறியதாவது:-

பிரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது. கடந்த வாரம் கூட இருவரும் அருமையாக உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நண்பராகவும் ஆலோசகராகவும் எனக்கு இருந்தார். நீங்கள் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்துபோயிருக்கிறது.

எங்கள் குடும்பம் ஒரு தூணை, நல்ல நண்பரை இழந்துவிட்டது. எங்கள் வாழ்க்கையில் உங்கள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு என்பதை உணர்கிறோம். எனவே உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வாழும் வரை பகிருங்கள்.

நாம் வாழும் ஒவ்வொரு நாளும் கடவுளின் பரிசாகும். இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan