மலையாள திரைப்படத்தில்ும் போதைப்பொருள் புழக்கம் – பிரபல நடிகையின் தந்தை பகீர் தகவல்

மலையாள திரைப்படத்தில்ும் போதைப்பொருள் புழக்கம் – பிரபல நடிகையின் தந்தை பகீர் தகவல்

மலையாள திரைப்படத்தில்ும் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது என்று பிரபல நடிகையின் தந்தை பகீர் தகவல் அளித்துள்ளார்.

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி ரியா சக்ரபோர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல பிரபலங்கள் இதில் சிக்குவார்கள் என தெரிகிறது.

 இந்தநிலையில் மலையாள திரையுலகிலும் கூட போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது என தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார் பகீர் தகவலை கூறியுள்ளார்.

 “மலையாள திரையுலகிலும் போதை பொருட்கள் புழக்கம் இருக்கத்தான் செய்கிறது. படப்பிடிப்பு சமயங்களில் சில புரோடக்சன் பையன்களே எங்களிடம் வந்து, “சார், கேரவனுக்குள்ளேயே நுழைய முடியவில்லை.. அந்த அளவுக்கு வாடை அடிக்கிறது” என அடிக்கடி கூறிய நிகழ்வுகளும் உண்டு என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan