அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் தான் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பை நாளை வெளியிட இருக்கிறார்.

மாநகரம், கைதி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. மேலும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை அதிகாரப்பூர்வமாக லோகேஷ் கனகராஜ் அறிவிக்க இருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan