சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் காவல் துறை

சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் காவல் துறை

சொந்த வீட்டிலேயே கணவனுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திரைப்படம் ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் தேர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தொடர் நடிகைகளுக்கும் இவர் தேர் ஓட்டி வந்துள்ளார். அந்த வகையில்தான் தெய்வமகள் தொடர் நடிகை சுசித்ராவுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலித்து வந்த இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும் தவித்துள்ளனர். அப்போது தனது சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். 

மணிகண்டன் அங்கு சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை பார்த்ததும் கணவனிடம் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்னைக்கு சென்றுவிடலாம் என நடிகை சுசித்ரா ஐடியா கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்க திட்டம் போட்டுள்ளார்.

இதையடுத்து சுசித்ராவை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்த மணிகண்டன், சில நாட்களுக்கு பின் மனைவி சொன்னபடி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதை அறிந்த மணிகண்டனின் பெற்றோர், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். 

விசாரணை நடத்தியதில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்த காவல் துறையினர் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கணவன் மாட்டிக் கொண்டதை அறிந்த நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan