இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல… சூர்யா படம் குறித்து விஜய் பட இயக்குனர் கருத்து

இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல… சூர்யா படம் குறித்து விஜய் பட இயக்குனர் கருத்து

இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல என்று சூர்யா படம் குறித்து விஜய் பட இயக்குனர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மண்ணுருண்ட மேல’ என்ற பாடலில் ஜாதியைக் குறிப்பிடும் ஒரு வார்த்தை இருப்பதாகவும், இது அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்தப் பாடலை ஏகாதசி என்பவர் எழுதியிருந்தார். இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் செய்தி குறித்து இயக்குநர் ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல… குட் பாய்ஸ்’ என்று பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’சச்சின்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan