விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு பகைவனாகும் பிரபல நடிகர்?

விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கு பகைவனாகும் பிரபல நடிகர்?

விஜய்க்கு பகைவனாக நடித்த நடிகர் ஒருவர் அடுத்ததாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு பகைவனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் 50 சதவீதம் முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி திரைப்படம் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விரைவில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். 

ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கவும் 2 மாதங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு பகைவனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜாக்கி ஷெராப் ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தில் பகைவனாக வந்தார். ஆரண்ய காண்டம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அண்ணாத்த படத்தில் பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி ஆகியோரும் பகைவனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர். 

ரஜினி மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் நயன்தாரா வக்கீலாக வருகிறார் என்றும் தகவல் கசிந்துள்ளது. கிராமத்து பின்னணியை கொண்ட கதையம்சத்தில் தயாராகிறது. கொரோனாவால் அண்ணாத்த படம் கைவிடப்பட்டு விட்டதாக வெளியான தகவலை படகுழுவினர் ஏற்கனவே மறுத்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan