பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்…. இளம் நடிகர் திடீர் மரணம்

பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்…. இளம் நடிகர் திடீர் மரணம்

இளம் நடிகர் ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள டி.வி சேனல்களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரிநாத். இவர் அமலா, மின்னுக்கேட்டு, சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது சபரிநாத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 43 வயதே ஆன நடிகர் சபரிநாத்துக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சபரிநாத்தின் திடீர் மறைவு மலையாள சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan