கொரோனாவில் இருந்து மீண்ட மணிரத்னம் பட நடிகை

கொரோனாவில் இருந்து மீண்ட மணிரத்னம் பட நடிகை

கொரோனாவில் இருந்து மீண்டதை ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்று மணிரத்னம் பட நடிகை மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ‘தக்க தைய்ய தைய்யா’ என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் இந்தி நடிகை மலைக்கா அரோரா. சமீபத்தில் இவரது காதலன் அர்ஜூன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 46 வயதான மலைக்கா அரோராவும் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் தொற்று பாதிப்பில் இருந்து குணமானதாக அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இறுதியில் பல நாட்களுக்கு பிறகு எனது அறையைவிட்டு நான் வெளியே வந்து உள்ளேன். இது சுற்றுலா வந்தது போல உணர்வை தருகிறது. 

குறைந்த வலி, அசவுகரியத்துடன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததை ஆசிர்வாதமாக கருதுகிறேன். மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர்கள் மற்றும் மும்பை மாநகராட்சி, குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan