அஜித்துக்கு வந்த அதே பிரச்சனை இப்போ ஜாக்கி சானுக்கு வந்திருக்கு

அஜித்துக்கு வந்த அதே பிரச்சனை இப்போ ஜாக்கி சானுக்கு வந்திருக்கு

உலக அளவில் பிரபலமான நடிகர் ஜாக்கி சான், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீன நடிகரான ஜாக்கி சான் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டவர். குறிப்பாக இவரது ஆக்‌ஷன் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது 66 வயதாகும் ஜாக்கி சான் இன்றளவும் தான் நடிக்கும் படங்களில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜாக்கிசானின் நிறுவன பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்கி சானின் நிறுவனம் பல இளம் நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற ஒரு பிரச்சனை தான் நடிகர் அஜித்துக்கும் வந்தது. சென்ற வாரம் அவர் இது பற்றி தனது வழக்கறிஞர் மூலமாக எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். தன் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Tags :

Source: Malai Malar

Author Image
murugan